அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், 100ஆவது வயதில், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார். அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயற்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார்.