ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஜிம்மி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார். மேலும், கடந்த 2002ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.