வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் இடையில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதோடு, இதில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவின், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாத முறியடிப்பு, பாதுகாப்பு, ஒருங்கமைக்கப்பட்ட, நாடு கடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில், முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுக்களின்போது, இரண்டு நாடுகளினதும் அதிகாரிகள், பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம், இலங்கை, ஆசியப் பிராந்தியம், இராணுவ உறவுகள், வருகைப் படைகள் உடன்பாடு, இலங்கையின் அமைதிகாப்புக்கான உதவி, கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, மெக்சிக்கோவுக்கு சென்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.