கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ச்சியான வர்த்தக விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு தவிர்க்க முடியாததாகும் என்று பெயரை வெளியிடாத அமெரிக்க மற்றும் கியூப அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும் கியூப அரசுக்கும் அமெரிக்க விமான சேவைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என உறுதி செய்யப்படவில்லை.அமெரிக்கா 54 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஓகஸ்டில் கியூபாவுடன் தூதரக உறவை ஆரம்பித்தது. எனினும் கியூபா மற்றும் அமெரிக்கா உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக கியூபா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா அகற்றிக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. விமான சேவை தொடர்பில் உத்தியோகபூர்வ உடன்பாடொன்று எட்டப்படும் சூழலில் அமெரிக்காவில் இருந்து நாளாந்தம் கியூபாவுக்கு ஒரு டஜன் விமானங்கள் வருகைதர வாய்ப்பு உள்ளது.