அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், முன்னொருபோதும் இல்லாதவாறு பல திருப்பங்களை கொண்டு வரவுள்ளது. ஹிலாரி கிளின்டன் தேர்தல் செலவுகள் பற்றிய இரகசிய ஆவணங்கள் வெளியிடப் படும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
ஹிலாரியின் மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத்துறை பகிரங்கப் படுத்தியது என்ற குற்றச்சாட்டை அசாஞ்சே மறுத்துள்ளார். விக்கிலீக்ஸ் இணையத்திற்கு நேரடியாக அனுப்பப் பட்டுள்ளன. அவற்றை யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாது. அரசாங்கத்தில் வேலை செய்பவர்களாக இருக்கலாம்.
அவர்களது அடையாளம் தெரிய வருவதால் உயிருக்கு ஆபத்து. அண்மையில் வாஷிங்டன் நகரில் ஒரு 27 வயது இளைஞன் மர்மமான முறையில் கொல்லப் பட்டான். அந்த இளைஞன் அரசுக்குள் நடக்கும் முறைகேடுகள் பற்றிய தகவல்களை விக்கிலீக்ஸிற்கு அனுப்பி இருந்தான். கொலையாளிகள் பற்றிய துப்புக் கொடுப்பவர்களுக்கு $20000 டாலர் சன்மானமாக வழங்கப் படும் என்று விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க உளவுத்துறையின் தெரிவாக இருப்பதால், டொனால்ட் டிரம்ப் ஒரு ரஷ்ய உளவாளி என்று கதை கட்டி விட்டிருப்பதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லையென்றும் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
(Nieuwsuur நெதர்லாந்து தொலைக்காட்சி செய்திகளில் ஜூலியன் அசாஞ்சேயுடனான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்.)
(Kalai Marx)