ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா போட்டியிடுவார் என்கிற அச்சத்தில் ஐ.தே.கவின் அமைச்சர்கள் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து கோட்டாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்துவருவதாகவும் இதன்போது விமல் எம்.பி தெரிவித்தார்.
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை கோட்டா அமெரிக்காவிடம் சமர்ப்பித்தையடுத்தே அவருக்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், கோட்டாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சூழ்ச்சிகளையும், எதிர்க்கட்சி வெற்றிக்கொள்ளும் எனவும் இதன்போது ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.