அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடையாது

பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம். அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.