அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யதார்த்தம் புரிகிறது! ஆனால் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள்

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால்,  சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு  அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில்  கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்