“தற்போது நாட்டிலுள்ள அரசியல் நிலைமையானது மக்களுக்கு விரோதமான செயற்பாடாகவும் மக்களுக்கு எதிரான செயலாகவும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது” என்றார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (09) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நாட்டில் இன்று ஜனநாயக ஆட்சியில்லை. ஒரு தனிநபர் சர்வாதிகாரம், தனி கட்சியினுடைய சர்வாதிகாரமாக, ஒரு குடும்பத்தினுடைய சர்வாதிகாரமாகவே ஆட்சி இருக்கிறது என்றார்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகளால் தலையைத் தூக்கமுடியவில்லை எனத் தெரிவித்த அவர், தானிய வகைகளின் விலைகளும் உயர்வடைந்து காணப்படுகிறது என்றார்.
“கொரோனா என்றும் திரை மறைவில் நமது நாடு விற்கப்படுகின்றது. தரை மட்டுமன்றி கடலும் இந்த அரசாங்கத்தால், அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுகிறது” எனத் தெரிவித்த அவர், “நாட்டு வளங்கள் சூரையாடப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நாளைய (இன்றை) போராட்டம் அமையும்” என்றார்.
“சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பொதுமக்களையும் இணைத்துக்கொண்டே இந்தக“ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்” என்றார்.