அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?!

நாடாளுமன்றத்தில்முன்வைக்கப்பட்டிருக்கும்அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானநிபுணர்குழுவின்அறிக்கையைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பங்காளிக்கட்சியானதமிழ்ஈழவிடுதலைஇயக்கம் (ரெலோ) அடியோடுநிராகரித்துள்ளதுடன், அந்த அமைப்பின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன்எம்.பி., செயலாளர்நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்துஇன்று (20) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதில்குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத்தீவில்தேசியக்கேள்வியாகபலதசாப்தங்களாகநீடித்துக்கொண்டிருப்பதும், பொதுமக்கள், தமிழ்ப்போராளிகள்மற்றும்சிங்களபடைவீரர்கள்உட்படஇலட்சக்கணக்கானஉயிர்களைபலிகொண்டநீண்டதோர்யுத்தத்திற்குவழிவகுத்ததுமானஇனப்பிரச்சினைக்கு, இலங்கைத்தீவுஒரேநாடுஎன்றவரையறைக்குள்நீதியானதும், நிலைத்துநிற்கக்கூடியதுமானஅரசியல்தீர்வுஒன்றினை, ஜனநாயகவழிமுறைகளுக்குஊடாகஏற்படுத்திக்கொள்ளமுடியும்என்பதில்நாம்இப்பொழுதும்நம்பிக்கைகொண்டுள்ளோம்.

இத்தகையஅரசியல்தீர்வுஎன்பதுசுதந்திரஇலங்கைத்தீவில்தமிழ்த்தேசியஇனம்அனுபவித்திருக்கும்பாரபட்சம், அநீதிமற்றும்துன்பதுயரங்களுக்குமுடிவுகட்டும்விதத்தில், எமதுமரபுவழித்தாயகமானவடக்கு – கிழக்குமாகாணங்களில்பூரணசுயாட்சிஉரிமைகொண்டஅரசியல்நிர்வாகஏற்பாட்டினைஅமைப்பதாகஇருக்கவேண்டும்என்பதிலும், இனப்பிரச்சினையின்அடித்தளமாகஇருந்துவந்திருக்கும்ஒற்றையாட்சிமுறைக்குப்பதிலாக, சமஷ்டிஆட்சிமுறைஎன்றுஅழைக்கப்படும்இணைப்பாட்சிமுறையில்அமையவேண்டும்என்பதிலும்எமதுகட்சியும்அங்கம்வகிக்கும்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎமதுமக்களின்ஆதரவையும்ஆணையையும்கடந்ததேர்தல்கள்பலவற்றில்தொடர்ந்துபெற்றுவந்திருக்கின்றது. எமதுமக்களுக்குநாம்அளித்தவாக்குறுதிகளிலிருந்துநாம்ஒருபோதும்பின்வாங்கமுடியாது.

இந்தஅரசியல்பின்னணியில், இப்பொழுதுமுன்வைக்கப்பட்டிருக்கும்அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானநிபுணர்குழுவின்அறிக்கையைகவனமாகவும்நிதானமாகவும்ஆராய்ந்துபார்க்கையில், அதனைநிராகரிப்பதைத்தவிரவேறுதெரிவுஎதுவும்எமக்குஇல்லைஎன்பதைநாம்திட்டவட்டமாகதெரிவிக்கவேண்டியுள்ளது.

இந்தநிபுணர்குழுவின்அறிக்கையின்பிரகாரம்ஒற்றையாட்சிமுறைதொடர்ந்துநீடிப்பதற்குமிகச்சாதுரியமாகபிரேரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பௌத்தமதத்திற்குஇப்போதுள்ளஅரசியல்சாசனத்தின்கீழ்வழங்கப்பட்டிருக்கும்அரசமதம்என்னும்சட்டஅந்தஸ்த்துதொடர்ந்துபாதுகாக்கப்படுவதற்கும்வழிஅமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைநாட்டின்ஏனையமதங்கள்தொடர்ந்தும்அநாதைமதங்கள்போலகணிக்கப்படுவதற்கும், நடாத்தப்படுவதற்கும்உத்தரவாதம்அளிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், அதிகாரபங்கீடுவிடயத்தில், அதனைவிஸ்தரித்து, வலுப்படுத்திமுழுமைப்படுத்துவதற்குபதிலாக, அரைகுறையானஅதிகாரங்களைமாத்திரமேமாகாணசபைகளுக்குவழங்கியிருக்கும்பதின்மூன்றாவதுதிருத்தத்துக்குஅப்பால்ஆக்கபூர்வமாகஎந்தவொருமுன்னேற்றகரமானயோசனையும்காணப்படவில்லை.

அதேநேரத்தில்அரசகாணிகள்விடயத்தில், நிலப்பங்கீடுகள்வழங்குவதில்பாரியசிங்களக்குடியேற்றங்களுக்குஅடிகோலியுள்ளமகாவலிஅபிவிருத்தித்திட்டம்உட்படஇப்போதுசெயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்அபிவிருத்திநடவடிக்கைகளில்இப்போதையநடைமுறைகளேதொடர்ந்தும்பின்பற்றப்படும்என்றுதெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழினத்தின்தாயகம்திட்டமிட்டசிங்களக்குடியேற்றத்தால்தொடர்ந்துசூறையாடப்படுவதைஇதுஉறுதிப்படுத்தும்.

அத்துடன், சட்டமன்றத்தின்இரண்டாவதுசபையாகபிரேரிக்கப்பட்டிருக்கும்யோசனையின்படி, மாகாணசபைகள்மூலம்பிரதிநிதிகள்அச்சபைக்குதேர்ந்தெடுக்கப்படுவதற்குபதிலாக, மாகாணசபைஉறுப்பினர்கள்மத்தியில்இருந்தேஅத்தெரிவுஇடம்பெறுவதுஎன்பது, மாகாணசபைகளின்சுயாதீனத்தைகேள்விக்குரியதாகமாற்றுவதோடு, ஒற்றையாட்சிமுறைக்குவலுவூட்டுவதுமாகவேஅமையும்.

எமக்குஅருகில்உள்ளஇந்தியநாட்டின்நாடாளுமன்றத்தின்மேல்சபையானராஜ்யசபாஎன்றுஅழைக்கப்படும்மாநிலங்கள்அவையைமாதிரியாகக்கொண்டு, இந்தயோசனைதயாரிக்கப்படாததுஅரசியல்உள்நோக்கம்கொண்டதுஎன்றேகருதவேண்டியுள்ளது.

தமிழ்மக்களின்நீண்டகாலக்கோரிக்கையானஇணைந்தவடகிழக்குமாநிலம்என்பதுவெறும்அரசியல்கனவாகவேநீடிக்கக்கூடியவிதத்தில், அருகருகாகஅமைந்திருக்கும்இரண்டுஅல்லதுமூன்றுமாகாணங்களின்இணைப்புப்பற்றியபிரேரணைஅமைந்திருக்கிறதுஎன்பதனையும்நாம்சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

இந்தவிவகாரத்தில்இப்போதுள்ளஅரசியல்சாசனஏற்பாட்டிற்குமேலதிகமாகசம்பந்தப்பட்டமாகாணங்களில்சர்வஜனவாக்கெடுப்புநடாத்தப்படவேண்டும்என்றவிடயமும்புதிதாகபுகுத்தப்பட்டுள்ளது.

சிங்களக்குடியேற்றத்தால்மோசமாகபாதிக்கப்பட்டிருக்கும்கிழக்குமாகாணத்தைவடக்கிலிருந்துதொடர்ந்துதனிமைப்படுத்திவைப்பதற்குஏதுவாகஇந்தச்சர்வஜனவாக்கெடுப்புயோசனைமுன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சுருக்கமாகச்சொல்வதானால், தமிழ்த்தேசியஇனத்தின்அரசியல்அபிலாஷைகளைத்தொடர்ந்துநிராகரித்து, சிங்களபௌத்தபெரும்பான்மையினரின்அரசியல்மேலாதிக்கத்தைநிலைநிறுத்தும்விதத்தில், இந்தத்தீர்வுத்திட்டஅறிக்கைஅமைந்துள்ளதுஎன்பதனைநாம்திட்டவட்டமாகவும்தெட்டத்தெளிவாகவும்தெரிவிக்கத்தவறினால்எமதுமக்களுக்குதுரோகம்செய்தவர்களாகிவிடுவோம்.

எமதுதாயகத்தின்விடுதலைக்காகஆயுதம்ஏந்திப்போராடி, இந்திய – இலங்கைஒப்பந்தத்தைஅடுத்துஜனநாயகஅரசியல்நீரோட்டத்தில்இணைந்து, கடந்தமுப்பத்தியொருஆண்டுகளாகதொடர்ந்துசெயற்பட்டுவந்திருக்கும்எமதுஅமைப்பு, எமதுமக்களின்தேசியஅபிலாஷைகளைநிறைவேற்றிவைக்கக்கூடியநீதியானஅரசியல்தீர்வுக்காகதொடர்ந்தும்பாடுபடும்”எனதெரிவிக்கப்பட்டுள்ளது.