“அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்”

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன்   சுகவீனமுற்றிருந்த நிலையில், உரிய நேரத்தில்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காமை காரணமாக நேற்று(2)  உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,   வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் உயிர்கள் பலியாக  இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (3)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த மக்கள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.