அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கையில் ‘அரசியல் கைதிகள்’ என பெரும்பாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைக் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏதாவது வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜேபண்டார, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்ட அல்லது கடுமையான நிலைமைகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களாவர்.

இந்தக் கைதிகள் தன்னிச்சையான தடுப்புக்காவல், நீண்டகால சிறைவாசம் மற்றும் நியாயமான விசாரணையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைக் குழுக்கள், சந்தேக நபர்களின் குடும்பங்கள் மற்றும் ஆர்வலர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர்.

அத்துடன், இது தொடர்பான சட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும்,  அத்தகைய குற்றச்சாட்டுக்களில் உள்ளவர்களுக்கு நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு, ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடப்படும் என, ஜனாதிபதி அநுரக்குமார திசாநாயக்க, வடக்கில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply