மேலும், அரிசி விலை காட்டப்படாமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,060 ஆகும். அத்துடன், அரிசி இருப்புக்களை மறைத்தமை தொடர்பில் 240 வழக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக, வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் குறிப்பிட்டார். இதன் தரவுகளை ஆய்வு செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.