அரைக் காற்சட்டை நபரால் பெறும் சர்ச்சை

இதன்போது அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் உடனிருந்த சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு அதனைக் காணொளி எடுத்து அச்சுறுத்தி பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த பல்கலைக்கழக பதிவாளரும் அதே நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே, ஏமாற்றமடைந்த குறித்த குழு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

குறித்த குழுவினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி,
“யாழ் பல்கலைக்கழகத்தின்  கலாசாரம் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருப்பவர்களின் காற்சட்டையில் தொங்கிக்கொண்டிருப்பது தான் துயரம்” என தெரிவித்து பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடமைக்கு இடையூறு விளைவித்ததன் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது.