அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். 

 தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

 நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.