சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப்பிற்கு வராததால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அதிகாரிகள் வீட்டிற்கு விரைந்தனர்.
இதன்போதே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் அனைவரும் ஒரு கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தின் போது கைகளைப் பிடித்துக் கொண்டு, இருப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் குணதிலக.
கிறிஸ்மஸுக்கு முன், குணதிலக தனது சுயவிபரத்தை பேஸ்புக்கில் 18 நிமிட வீடியோவாக வெளியிட்டார்.
அதில் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், உளவியல் நிபுணரைப் பார்த்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.
மேலும் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.