மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜிவரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தமது கருத்துகளையும், பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.
இதன்போது மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாதகமாக காணப்படும் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், கல்வித்துறை சார் திணைக்கள அதிகாரிகளிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், கல்வி அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.