ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு. யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட். ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர். இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார். யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார்.ரணில் புலிகள் சமாதான காலத்தில் புலிகளால் சுட்டுக்கொல்லப்ப்ட்ட யாழ் மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை. சுட்டுக்கொன்ற புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறான், எனது தம்பிதான் இராசதுரையைக் கொன்றதென்று சொன்னவன் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறான்.
சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள் யாழ்-பல்கலைகழக மாணவர்கள். யாழ்.மாவட்ட அதிபர்கள் சங்கம், யாழ்-பிரஜைகள் குழு, சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06. 85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தன.
யாழ்.நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்பு பட்டிகளோடு காணப்பட்டனர். இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் தெடரவே செய்தன. இதற்கிடையே யாழ்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒரு அறிவித்தலை வெளியிட்டது. “ஆனந்தராஜா கொலை பற்றிய தகவல் தருவோருக்கு 5 இலச்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டது.
அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச்சடங்கில் பெருமளவில் மாணவாகளும், பொதுமக்களும் திரண்டால் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும், அதனால் அவரது சடலத்தை யாழ்.பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரை சுட்ட இயக்கம் முயற்சித்தது. ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவ மனைக்கு சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது.
அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர். சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பதும், சம்பந்தபட்ட இயக்கம் மூலமாக வெளியே வந்தது.
கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள். யாழ.நகரமெங்கும் உரிமை கோரும் சுவரரெட்டிகள் புலிகள் அமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்தன. ஆனந்தராஜாவின் படையினரோடு உறவுகளை வைத்திருந்தார். எச்சரித்தும் கேட்கவில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள். புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவாகள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில்- தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது.
“ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்?”என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார் : “அப்படி ஒருவரை போட்டால்தான் மற்றவர்கள் பயப்பிடுவார்கள். இத்தனைக்கும் ஆனந்தராஜா ஈழமாணவர் பொது மன்றத்தோடு(G:U:E:S)தொடர்பாக இருந்தவர். “பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் மாணவர்களை அழைத்து போராட்ட பிரசார வகுப்பு நடத்தலாம் தனது ஒத்துழைப்பு இருக்கும்” என்று (G:U:E:S) அமைப்பிடம் கூறியிருந்தவர்.
யாழ்-பிரஜைகள் குழுவில் ஒருவராக இருந்தமையால், யாழ்பாணத்தில் கைது செய்யப்படும் இளைஞர்களது பெற்றோர்கள் ஆனந்தராஜாவிடம் ஓடுவார்கள். படை அதிகாரிகளை சந்தித்து கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பேசுவார் ஆனந்தராஜா. ஆனால், ஆனந்தராஜாவுக்கு புலிகளைப் பிடிக்காது. இராணுவத்தினருடன் சினேகபூர்வ கிரிகெட் ஆட்டத்திற்கு ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன.
“கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள். “நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா. அதுதான் கிட்டுவுக்குக் கோபம்.“மண்டையில் போடு”என்று சொல்லிவிட்டார். அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்ட ரிச்சார்ட் இயக்கத்தைவிட்டு விலகும் முன்னர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன். பலியானார்கள். இதுவும் 1985 ல் தான் நடந்தது.