வியட்நாம்மில் ஆபத்துமிக்கப் புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் உருமாற்றமடைந்திருந்தாலும் இந்தியா, இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைரஸ்களே ஆபத்து மிக்கதாக இருந்து வருகிறது. வியட்நாம் வைரஸ் மிக வேகமாகப் பரவுவதோடு, காற்றிலும் பரவுமெனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, இங்கிலாந்து, இந்திய வைரஸின் கூட்டுக் கலவையாகவே இந்த வைரஸ் இருப்பதாகவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.