இந்நிலையில் அங்கு உள்நாட்டுப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லே எச்சரித்திருக்கிறார். பன்ஞ்ஸிர் பள்ளத்தாக்கில் நடைபெறும் யுத்தம் உள்நாட்டுப்போருக்கு வழிவகுக்கலாம். நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கவும் இது ஏதுவாகலாம்.
கடந்தமாதம் ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் மின்னல் வேக போக்கைத் தொடர்ந்து 20 வருட யுத்தத்துக்குப்பின்னர் அமெரிக்க இராணுவம்
வெளியேறியதையடுத்தும் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
மலைப்பாங்கான பன்ஞ்ஸிர் பள்ளத்தாக்கைப்பாதுகாக்கும் எதிர்ப்பு சக்திகளை முறியடிக்க தலிபான்கள் முயற்சிசெய்து வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் இன்னும் தங்கள் புதிய ஆட்சியை முடிவு செய்யாமலிருக்கும் நிலை ஆய்வாளர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு கெரில்லா படையிலிருந்து அரசாங்கத்துக்கு மாற முனைவதானது அதிகாரத்தை ஒருங்கிணைக்க முடியுமா என்று ஜெனரல் மார்க் மில்லே கேள்வி எழுப்பினார். இது ஓர் உள்நாட்டுப்போருக்கான தருணம் என்றும் மார்க் மில்லே தெரிவித்தார். அது உண்மையில் அல்-கொய்தாதாவின் மறுசீரமைப்பு அல்லது டேஸின் வளர்ச்சிக்கு வழிவகையை ஏற்படுத்தலாம் என்று ஃபொக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் தாங்கள் முதல்முறை
சக்திபெற்றபோது நடத்தியதை விட அதிக நலன்களை செய்வதாகக் கூறியுள்ளனர். அதாவது சோவியத் படையெடுப்பும் அதற்குப் பின்னர் நடைபெற்ற இரத்தக்களரியும நினைவுக்கு வருகின்றன.
சிறந்த ஆட்சியை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தள்ளனர். எனினும் பெண்களை உயர் மட்டங்களில் சேர்க்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. என்றும் அவர் கூறினார்.