“யுத்தபூமியான அங்கு இன்னும் விளையாட்டு முற்றுப்பெறவில்லை” யென்றும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில், அமெரிக்க கூட்டுத்தலைவர்களின் தலைவர் மார்க் மில்லி பேசுகையில், “தலிபான்கள் வெற்றியடைந்து வருவதாக ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
“உண்மையில் அவர்கள் ஒரு முழுமையடையாத வெற்றியை தம் சார்பில் பிரசாரப்படுத்தி வருகின்றனர். இன்றைய நிலைமையின்படி 212 , 213க்குக் குறைவாக அல்லது கூடுதலான மாவட்ட மையங்கள அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென்று நினைக்கிறேன். அதாவது அங்குள்ள 419 மையங்களில் இது அரைவாசிக்கும் குறைவானதாகும்” என்றார். .
“கடந்த ஆறு மாதங்களில் தலிபான்கள் கணிசமான அளவு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர். எப்படியிருந்தபோதிலும் அவர்கள் மாகாண தலைநகரங்கள் எதனையும் கைப்பற்றவில்லை” என்றார்.
ஆப்கானிஸ்தானில் 34 மாகாண தலைநகரங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை தலிபான்கள் ஒன்றையும் கைப்பற்றவில்லை. எனினும் இவற்றில் அரைவாசிப்பகுதி புறநகர்ப்பகுதிகளில் அவர்கள் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், அத்துடன் பிரதான மக்கள் மையங்களை தனிமைப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
“மாகாண தலைநகரங்களைப் பாதுகாப்பதற்காக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மாவட்ட மையங்களை விட்டுக்கொடுப்பதாகவும் ஜெனரல் தெரிவித்தார். அமைதிக்கான ஒரு வாய்ப்பும் உண்டு. தலிபான் அல்லது எந்தவொரு பிரிவினரும் பொறுப்பேற்கும் வாய்ப்பும் உண்டு” என்றார்.
அமெரிக்கா மிக உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டு வருகிறது. இறுதி விளையாட்டு இன்னும் எழுதப்படவில்லையென்றே நான் நினைக்கிறேன் என்றும் மில்லி தெரிவித்தார்.
அமெரிக்கா அதன் படைகளைத் திரும்பப்பெறும் திட்டத்தை மே மாதம் அறிவித்ததிலிருந்து வன்முறைகள் அதிகரித்திருப்பதை ஆப்கான் உணர்ந்துள்ளது. வெளியேற்றத்தை ஓகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் இறுதியில் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளன. ஆனாலும் இராஜதந்திர வசதிகள் மற்றும் சர்வதேச விமான நிலையம் என்வற்றுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறிய சக்திமிக்க அமெரிக்க படைப்பிரிவு ஒன்று காபூலில் இருக்குமென்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் குறிப்பிட்டார்.