இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளன.
“எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது, அத்துடன் பயங்கரவாதிகள் எவருக்கும் புகலிடம் அளிக்கக்கூடாது”என்பதே அத் தீர்மானமாகும்.
மேலும் “ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்” எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணொளி வாயிலாக இத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன் மூலம் இத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.