புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.