ஆரையம்பதியில் ஆவாகுழு பாணியில் வாள்வெட்டு

மட்டக்களப்பு – ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில்  5 பேர் கொண்ட குழு   வாள்களுடன்  நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டனர்.