இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, “காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம். இன்னும் 48 மணி நேரம் தான் காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 88 ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. திங்கள் கிழமை (06) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் UNRWA என்ற பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்தவர்களாவர். ஒரே போரில் இத்தனை ஐ.நா. ஊழியர்கள் உயிரிழிந்திருப்பது வேதனை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.