பொலிஸாரின் அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள், நேற்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற நிலையில், அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
எனினும் போராட்டக்காரர்கள் பின்வாங்காததால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கெள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் மிலான், செசினா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணியிடங்களில் கொரோனா சுகாதார அனுமதி அட்டை என்ற திட்டம் அமுலில் உள்ளது.
தற்போது மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் இது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு இருந்தது. இதற்காக, கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இந்த சுகாதார அனுமதி அட்டை திட்டம் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அனைத்து பணியிடங்களிலும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அனுமதி அட்டை இல்லாத தொழிலாளர்கள் சம்பளம் இல்லாமல் இடைநிறுத்தம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.