இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாங்கிய விசேட விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.30க்கு வந்தடைந்தது. அந்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார். அதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே கையளித்தார்.