அங்கு தொடர்ந்துரைத்த அவர், சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தையும் பெற்று, தமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் கௌதாரிதுனையில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளதென்றார்.
சீனாவின் தொழில்நுட்ப அறிவைப் பெற்று, போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகுமெனவும், அவர் கூறினார்.
இதேவேளை, இக்கலந்துரையாலின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மணல் அகழ்வுகள், வீதி அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுப தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது எனவும், டக்ளஸ் தெரிவித்தார்.