இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.