இதன் போது குறித்த படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது-30) என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி மீனவரை கைது செய்தனர். கைது செய்த மீனவரையும் , கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை மீனவர் கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று (29) இரவு 8 மணி அளவில் அழைத்து வரப்பட்டார்.
அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவரை சுங்கதுறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி, கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குமார், கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.