இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், திங்கட்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.