அதேசமயம் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மறியல் போராட்டத்துக்கு வரும் விவசாயிகளை தடுப்பதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள 4 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விவசாயிகள் திட்ட மிட்டபடி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். ஆனால், ரெயில் நிலையங்களில் விவசாயிகளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.