இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டுமெனவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாள்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும், ஈழத்தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
பழனிச்சாமி கண்டனம்
யாழ். பல்கலைக்கழத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றிரவு (08) இடிக்கப்பட்டமைக்கு தமிழ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.