நாடு கடந்த தமிழீழம்
சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதி பூண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள். ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர். தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார். இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.