அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.