இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு பின்னர் காபூலில் மீட்புப்பணிகளும் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனால், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தவண்ணம் உள்ளனர்
இந்த நிலையில்,காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆகும். எஞ்சிய 60 பேர் ஆப்கானியர்கள் ஆவர்.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார்.