இதில் குளத்தின் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் ஆவியாகுதல் என்பவை தவிர 59 ஆயிரம் ஏக்கர் கன அடி தண்ணீரை மாத்திரமே விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதால் குறித்த நீர் கொள்ளளவை வைத்து இவ்வாண்டு ஏறத்தாள 11 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையும் 1,500 ஏக்கர் மேட்டு நிலச் செய்கையும் மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானம் எடுப்பது தொடர்பான ஆலோசனைகட கூட்டம், கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ குழு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு, அதன்படி சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.