அதனையடுத்து, இலங்கையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
44 வயதான குறித்த நபர் தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், அலைபேசிகள் ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.