பிரித்தானியாவை நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பிரெக்சிற் விவகாரத்தைத் தீர்ப்பதிலான தமது முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த சமயத்திலேயே பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெரிவுகள் இல்லாத நிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறையில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளநிலையிலேயே, தனது பிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கரித்தால் தான் பதவி விலகுகின்றேன் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
பிரதமர் தெரேசா மேயின் குறித்த அறிவிப்பானது, பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கான மாற்றீடுகள் குறித்து தொடர்ச்சியான வாக்கெடுப்புகளை நாடாளுமன்றம் நடாத்துவதற்கு சில மணித்தியாலங்கள் முதலேயே பிரதமர் தெரேசா மேயின் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அந்தவகையில், குறித்த வாக்கெடுப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான பிளவையே வெளிக்காட்டியிருந்தது. பிரேரிக்கப்பட்ட எட்டு முன்மொழிவுகளும் பெரும்பான்மையைப் பெற்றிருக்காதநிலையில், தங்களது அரசாங்கம் பேரம்பேசியதே சிறந்த ஒப்பந்தம் என்ற தமது பார்வையை இது பலப்படுத்துவதாக பிரெக்சிற் அமைச்சர் ஸ்டீன் பார்க்லே தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் பிரெக்சிற் திட்டமானது 307-237 என்ற வாக்குகள் ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்ததுடன், பிரெக்சிற்றை உறுதிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பானது 295-268 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்ததுடன், பிரெக்சிற்றை நடைமுறைப்படுத்தப்படாமல் விடுவது 293-184 என்ற வாக்குகள் ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்ததுடன், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 400-160 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தமானது நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கிகரிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இவ்வாண்டு மே மாதம் 22ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுமென்பதுடன், பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தம் அங்கிகரிக்கப்படாவிட்டால், அடுத்தது என்ன நடக்கும் என்று விளக்கமளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி பிரதமர் தெரேசா மே செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.