இருக்கை சண்டை ; அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.  

பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். 

மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.