மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு இல்லாமை, குறைந்த கல்வி நிலைகள் மற்றும் வறுமை ஆகியவை சுவாச நோய்களின் பரவலுக்கு பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக விழிப்புணர்வு மற்றும் கல்வியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பில், உலகம் முழுவதிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதே இதன் இலக்காகும்.