ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்ய, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியை முதலீடு செய்வது தொடர்பில் சீன நிறுவனமும் இலங்கை துறைமுக அமைச்சும் இணைந்து தீர்மானம் மேற்கொண்டுள்ளன எனவும், குறித்த நிதி தனியார் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
நேரடி முதலீட்டுக்காக கிடைக்கப்பெற்றுள்ள இந்நிதி, இலங்கை அரசாங்கமும் சீன நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திட்டங்களுக்கமையக் காணப்படுகிறது எனவும், இலங்கை அரச தரப்பினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, துறைமுக அதிகாரசபைக்கு அதிகாரத்தை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த முதலீட்டு நிதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மேலும் 400 – 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய, சீனா முன்வந்துள்ளதெனவும், மஹிந்த அமரவீர தெரிவித்தார்.