அயல்நாட்டுத் தலைவர்களுக்கு கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய நுண்ணறிவு வழங்கப்படும் என்றும், அதன் உபாயங்கள் மற்றும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறை குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி, வியட்நாமின் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, பங்களாதேஷின் அவாமி லீக், இஸ்ரேலின் லிகுட் கட்சி, உகாண்டாவின் தேசிய எதிர்ப்பு இயக்கம், தான்சானியாவின் சாமா சா மபிந்துசி மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ரஷ்யா கட்சி ஆகியவை இந்தியாவுக்கு வருகை தரும் அரசியல் கட்சிகளில் அடங்கும்.
மொரிஷியஸ் தொழிலாளர் கட்சி, மொரிஷியஸ் போராளி இயக்கம் மற்றும் மொரிஷியஸ் கட்சி மொரிசியன் சமூக ஜனநாயக கட்சி, மற்றும் நேபாளி காங்கிரஸ், ஜனமத் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் நேபாளத்தில் இருந்து ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி ஆகியவையும் பாஜகவின் அழைப்பில் அடங்கும் கட்சிகளாகும்.