நேற்று (11) கிடைக்கப்பெற்ற பரிசோதனை அறிக்கையிலேயே மேற்படி 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்கள் என 431 பேரின் மாதிரிகள் கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்டு, முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்டன. அவற்றின் முடிவுகளே நேற்றுக் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவர்களில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 22 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 12 பேருமே இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களைச் சார்ந்த 6 வர்த்தக நிலையங்கள், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார அதிகாரியின் பணிப்புரையில் பேரில் மூடப்பட்டுள்ளன.