நேற்றையதினம் பதிவான கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
11 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,037 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 07 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 11 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியானது, கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 88 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்குவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளில் தெரியவந்துள்ளது.