“அவர்களுடன் சேர்த்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 997 பேர் கொரோனா பேராக அதிகரித்துள்ளது” என மட்டக்களப்பு பிராந்த சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் 100 பேருக்கு நேற்று (23) வெள்ளிக்கிழமை அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்த அவர், அதில், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நால்வருக்கு கொரோனா தொற்றுதி கண்டறிய ப்பட்டதையடுத்து இரு வகுப்பறைகள் மூடப்பட்டு 80 ஆசிரிய மாணவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
“இதனையடுத்து கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உறவினர்களான 14, 16 இருசிறுவர்களுக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதேவேளை வியாழக்கிழமை மேற்கொண்ட பிசோதனையில் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்கள் வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஹட்டனில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (24) உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (23) இந்த ஆசிரியர் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு ஏற்பட்டிருந்த திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான ஆசிரியர் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமைக் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பாடசாலையின் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் விமானப்பயணிகளை வழியனுப்ப வருவோம், விமானப்பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வருவோருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விருந்தினர்கள் எவரும் விமான நிலையத்துக்குள் நுழைய முடியாது. அப்பகுதி இழுத்து மூடப்பட்டது.
கேகாலை- தெரணியகல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன பகுதி முடக்கப்பட்டுள்ளது. அங்கு 10 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்தே அப்பகுதி முடக்கப்பட்டது.