இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா” எதிர் வரும் நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல இடங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அத்தியாவசியப் பொருட்களுடன் மக்கள் தயாராக இருப்பது நல்லது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.