உப்புவேலி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம சேவகர் பிரிவுதிருகோணமலை பொலிஸ் பிரிவில்- மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன. சீனக்குடா பொலிஸ் பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், டயினாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன.
தற்போது நாட்டில் சிறுவர்களிடையே புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்போது சிறுவர்களுக்கு காய்ச்சல், வாய் மற்றும் கால்களில் சிவப்பு நிற பருக்கள், நாக்கில் புண் ஏற்படுதல்,உடலில் அரிப்பு, உடல் வருத்தம்என்பன இக்காய்ச்சலின் அறிகுறியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்காய்ச்சால் பாதிக்கப்படும் சிறுவர்களுள் சிலருக்கு நகத்தோல் உரிவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில சிறுவர்களுக்கு இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் காய்ச்சல் காணப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், இத்தொற்று ஏற்புடும் சிறுவர்களை தனிமைபடுத்தி சுத்தமாக வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் 19 தொற்றின் மூன்றாவது ஆலையின் தாக்கமானது வேகமானதாகவும், வீரியம் கூடுதலாகவும் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. ஆர்.எம்.தௌபீக் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக இடைவெளியைப் பேணி, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் மீறும் பட்சத்தில் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களைப் பரிசோதிப்பதற்கு பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இன்று (29) முதல் கொவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் சில சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும், நாளை முதல் கிழக்கு மாகாணத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் இத்தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாவதாக சுகாதாரத் துறையினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தற்பொழுது தீவிரமடைந்து வருகின்றது.
இந் நிலையில் தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை” இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன.
அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ள.
மேலும் ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில் வரவுள்ளன.
எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் தாம் விரும்பும் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது ” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.
எனவே இந்த நிலைக்கு முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இதற்கு முன்னர் முன்னறிவித்தல் வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதென்றும் ஆனால் தற்போதைய தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.