எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இடம்பெறும்
விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை
போன்றவைக்கு இன்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் இறுதி அறிக்கையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 317ஆகும்.
அதில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 94 பேர் இனங்காணப்பட்டனர். ஏனைய 223 பேரும் கொழும்பு மாட்டத்துக்குள் இனங்காணப்பட்டனர்.
அதில், கெஸ்பேவையில் 51 பேருக்கும், கொம்பத்தெருவில் 15 பேருக்கும் வெள்ளவத்தையில் 15 பேரும் அடங்குகின்றனர். இன்றுக்காலை நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே கொழும்பு மாவட்டத்துக்குள் 223 பேருக்கு கொரோனா தொற்றியயிருக்கிறது.
கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, கெஸ்பேவ ஆகிய இடங்களைத் தவிர, ஏனையோர், பொரலஸ்கமுவ, கொட்டாவ மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினருக்கு கொரோனா தடுப்பு இரண்டாவது ஊசி ஏற்றும் நடவடிக்கை சம்பிரதாயபூர்வமாக இன்று (30) மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி காரியாலயத்தில் அதன் பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகாதார துறையினருக்கு முதலாவது ஊசி ஏற்றப்பட்டது. இருந்தபோதும் இந்த இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், தாதியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை ஏற்றினர்
இன்று மட்டும் 90 பேருக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் நாளை (01) இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடமபெறுமென மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி கிரிசுதன் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் சுகாதாரதுறையினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.