வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில் எவ்வித பயனும் இல்லை. அவ்வாறு நாட்டை முடக்கும் சந்தர்ப்பத்தில், நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும்.
“அனேக நாடுகளுமே தங்களது நாட்டை முடக்கம் நிலைக்கு உட்படுத்தாதமல், பாதிக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே முடக்கி வருகின்றன.
“எமது அரசாங்கம் சுகாதார நடவடிக்கைகளை பேணுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
“குறிப்பாக, வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர்.
“மேலும், இராணுவச் சோதனை சாவடிகளை நாங்கள் வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை கெடுபிடி என்று நோக்கக்கூடாது” என்றார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துத்துச் செல்வது தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று, நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த விவாதமானது காலை 11 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவாதம் தொடர்பான யோசனையானது ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை (03) 1,193 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு அலைகளின் போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி, திருகோணமலை அதிகூடிய தொற்றையும் அதி குறைந்த தொற்றை கல்முனைப் பிராந்தியமும் கொண்டுள்ளது.
கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23 பேரும் இரண்டாவது அலையில் 3,645 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 628 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 402 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 21 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கிழக்கில் மூன்றாவது அலையில் இதுவரை 09 பேர் மரணித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளியில் மூவரும் திருகோணமலையில் மூவரும் மூதூரில் இருவரும் அம்பாறையில் உகனயில் ஒருவருமாக இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, நேற்றுக் காலை நடைவடைந்த 24 மணிநேரத்தில் 95 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 8 கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் தற்போது 736 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
புளியாவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 180 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று (3) கிடைக்கப்பெற்ற நிலையில், 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இஞ்சஸ்டி தோட்டத்தில் 19 பேருக்கும் புளியாத்தை நகரில் 5 பேருக்கும் போடைஸ் தோட்டத்தில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து இஞ்சஸ்டி 319 எல் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இஞ்சஸ்டி மேல் பிரிவு, இஞ்சஸ்டி கீழ் பிரிவு, பிளிங்கிபோனி, அபகனி, ஹென்சி, பீரட், பாத்போட், பிளிங்கிபோனி கடைதெரு மற்றும் புளியாவத்தை நகரமும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , என்பீல்ட் 319ஐ கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட போடைஸ் தோட்டத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால், உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை ஒருவாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் 7ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.